இலங்கையின்
சுயாதீனம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு, சமூக பொருளாதார அபிவிருத்தி
என்பவற்றை பாதுகாப்பதற்கு சீனா தனது ஆதரவை தெரிவித்துள்ளது என சின்ஹுவா
செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி லியாங்கை சீனா சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்தபோதே இந்த உறுதிப்பாட்டை வழங்கினார்.
சீனாவின் அடிப்படை நலன்களில் இலங்கையின் ஆதரவுக்கு லியாங் நன்றி கூறினார்.
இரண்டு நாட்டு இராணுவங்களுக்கும் இடையில் தொடர்புகளை அதிகரிக்கவும் பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்பு, நட்புறவு என்பவற்றை உறுதி செய்யவும் இலங்கையுடன் ஒத்துழைக்க சீனா விரும்புவதாக லியாங் கூறினார்.
சீன - இலங்கை நட்புறவின் நீண்ட வரலாற்றை லியாங் பாராட்டிப் பேசினார். 55 வருடங்களுக்கு முன் தொடங்கிய இராஜதந்திர உறவு சீராக விருத்தியடைந்து வந்துள்ளதாகவும் லியாங் தெரிவித்துள்ளார்.
சீன - இலங்கை உறவுகள் எப்போதும் மிக ஆரோக்கியமாக இருந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும் மீள்கட்டுமாணம், அபிவிருத்தி என்பவற்றை முன்னெடுக்கவும் சீன வழங்கும் ஆதரவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ நன்றி கூறினார்.