நாட்டில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தால் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு நேரிட்டுள்ளதாக முன்னணியின் அரசியற் குழு உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நீதியை மதிக்கும் தேசத்தையும் ஒழுக்கமிகு சமூகத்தையும் உருவாக்குவதற்கான மக்கள் சந்திப்பு எனும் தலைப்பில் கோகன்தரயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பொருட்கனை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தேவைப்பட்டன இதனால் டொலரின் பெறுமதி அதிகரித்தது. முன்னர் 116 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இப்போது 123 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது எரிபொருளின் விலையை மறைமுகமாகத் தாக்கியுள்ளது.
முன்னர் ஒரு மெட்ரிக் தொன் எண்ணெய்யை ஆயிரம் டொலர்களுக்கு கொள்வனவு செய்தால் அதன் பெறுமதி ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய்களாக காணப்பட்டது. ஆனால் தற்போது ஒரு தொன் எண்ணெய் ஆயிரம் டொலர்களுக்கு கொள்வனவு செய்தால் அதன் பெறுமதி ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ரூபாவாக அமைந்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.