அமெரிக்காவுக்கு எதிராக வேட்டியை மடிந்து கட்டுகிறார் மேர்வின்


இலங்கைகு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டினை அரசு எதிர்ப்பதாகவும் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டி வரும் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
 
 பியகமவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் ஜெயலலிதா கூட வீதியில் மிகுந்த பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியிருந்தது. அவர் பயணிக்கும் வீதிகள் கூட போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. ஆனால் இன்று அங்கோ இங்கோ அவ்வாறானதொரு நிலையில் இல்லை.

கடந்த காலங்களில் ஊடகங்களில் என்னைக் கப்பக்காரன் எனக் கூறி செய்திகள் வெளியாகியிருந்தன. நான் அப்படியான பாவம் செய்பவன் அல்ல.. ஆனால், தண்டனை கொடுப்பவன். அதற்குக் கூடச் சற்று நான் ஓய்வு கொடுத்துள்ளேன் என்றார்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now