தொலைபேசி
குறுஞ்செய்தி ஊடக தேசிய பாதுகாப்பு, பாதுகாப்புப் படையினர் மற்றும்
பொலிஸார் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெறப்பட
வேண்டும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர்
லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
இவ்விதி உடனடியாக அமுலுக்கு வருவதாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
'தேசிய பாதுகாப்பு, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தொடர்பான
செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய
நிலையத்திடமிருந்து அனுதமி பெற வேண்டும் என உங்களுக்கு அறிவிக்குமாறு நான்
பணிக்கப்பட்டுள்ளேன்' அக்கடிதத்தில் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
இவ்விதியானது ஒரு வகை ஊடக தணிக்கையா என கேட்கப்பட்டபோது, தணிக்கையோ
கட்டுப்பாடோ எதுவுமில்லை. பாதுகாப்பு தொடர்பான செய்திகளின் உள்ளடக்கத்தை
அவை அனுப்பப்படுவதற்கு முன்னர் அறிந்துகொள்ள விரும்புகிறோம் என தமிழ்
மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு ஹுலுகல்ல தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் செய்தி இணையத்தளங்களை ஊடகத்துறை
அமைச்சில் பதிவுசெய்யுமாறு கடந்த நவம்பர் மாதம் அரசாங்கம்
உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.