ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்தினால் அதன் பங்காளி
கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக இவ்விரு
கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்றில் அதிருப்தி
வெளியிட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு
தெரிவித்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரான சுசில் பிரமேஜயந்தவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை பெற்றோலிய வளத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே இந்த அதிருப்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரமேஜயந்தவிடம் வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள் புறக்கணிக்கப்படுகின்றமை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்களாக நியமிக்கப்படாமை தொடர்பிலும் அமைச்சர் சுசில் பிரமேஜயந்தவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஒன்றரை வருடங்களாக அரசாங்கத்துடன் இணைந்துள்ள போதும் மக்களுக்கு எந்தவித அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளது. இதனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்த மக்கள் அதிருப்தியுடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதியுடன் கொண்டு செல்வதாக அமைச்சர் சுசில் பிரமேஜயந்த உறுதியளித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களிற்கு இது தொடர்பில் மீண்டும் கூடி ஆராய்வது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத், பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.பி.பாரூக் மற்றும் ஏ.எம்.அஸ்லம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர்;எம்.ரி.ஹசன் அலியினால் அண்மையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டன. அத்துடன் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.