பேலியகொட - திக்பிட்டியகொட - தலுகம பிரதேசத்தில் பௌத்த தேரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் தங்கியிருந்த பௌத்த விகாரையில் உள்ள கணினியில் ஆபாச
வீடியோ காட்சிகள் இருந்ததாகக் கூறி பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (06) மாலை குறித்த
பகுதிக்குச் சென்ற பொலிஸார் தேரரை ஆபாச வீடியோ அடங்கிய கணினியுடன் கைது
செய்துள்ளனர்.
தேரர் இன்று (07) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.