பாகிஸ்தான்
ஸ்தாபகர் முஹம்மது அலி ஜின்னா ஞாபகர்த்தமாக இலங்கை மாணவர்களுக்கு
புலமைப்பரிசில் வழங்குவதற்காக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்
விண்ணப்பங்களை கோரியுள்ளது.
க.பொ.த சாதாரன தரம் மற்றும் க.பொ.த உயர் தரம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும்.
பொருளாதார உதவி மற்றும் பெறுபேறுகளின் அடிப்படையில்
இப்புலமைப்பரிசிலுக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு 24,000 ரூபா ஒரு
வருடத்திற்கு வழங்கப்படும்.
இந்த புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை 53/6 கிறகரிஸ் வீதி, கொழும்பு –
07 என்ற முகவரியிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் எதிர்வரும்
மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரசாங்கம் 20 மில்லியன் ரூபா
பெறுமதியான ஜின்னா ஞாபகார்த்த புலமைப்பரிசிலினை இலங்கை மாணவர்களுக்கு
வழங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு மாத்திரம் க.பொ.த சாதாரன தரம் மற்றும்
க.பொ.த உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்கும் 107 இலங்கை மாணவர்களுக்கு 2.56
மில்லியன் ரூபா ஜின்னா ஞாபகார்த்த புலமைப்பரிசிலினை பாகிஸ்தான் அரசாங்கம்
வழங்கியமை குறிப்பிடத்தக்கது