ஒரு நாட்டின் தலைவர் என்ற சிறப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு
எதிராக ஐக்கிய அமெரிக்க மாநில நீதிமன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு
தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஒரு வெளிநாட்டு அரச தலைவர் என்பதால் அவருக்கு சிறப்பு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளதை அடுத்து அமெரிக்க மாவட்ட நீதிபதி கொல்லீன் கொல்லர்-கொட்டொலி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
நீதிமன்றம் இந்த முடிவை சாதாரணமாக எடுக்க முடியாது. வாதிகளின் முறைப்பாடுகள் அமெரிக்க மற்றும் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான வகையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்த அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது.
இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுவதானது, வாதிகளின் குற்றச்சாட்டுகள் அல்லது பிரதிவாதிகளின் தற்காப்பை பிரதிபலிக்கும் வகையில் அமையாது.
மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக உள்ள சட்டங்கள், அடிப்படை அரசியலமைப்பு மற்றும் சட்டக்கொள்கைள் என்பன, வாதியின் இந்த முறைப்பாட்டை இந்த நீதிமன்றம் தொடர்ந்து விசாரிப்பதைத் தடுக்கிறது. என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தனிநபரும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மற்றும் தவறான மரணங்களுக்கு எதிராக இழப்பீடு கோர முடியும் என்று 1992ம் ஆண்டு அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட சித்திரவதைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.