இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும்
வகையிலும் ஐ.நா வின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர
உத்தேசிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிரப்பு தெரிவித்தும் அரசாங்க
அதிகாரிகளும் ஊழியர்களும் நடத்திய போராட்டங்கள் புதனன்று மாலை
நடைபெற்றுள்ளன.
பொது நிர்வாக அமைச்சினால் திடீரென பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இது தொடர்பான பணிப்புரைகள் அரசாங்க அதிபர்களினால் பிரதேச செயலாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இத்தகைய போராட்டங்களை நடத்துமாறு தமக்கு உத்தரவுகள் வந்ததாக சில அரசாங்க அதிகாரிகள் தம்மிடம் முறையிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாவட்ட செயலகங்களிலுருந்து அரசாங்க அதிபர்கள் தலைமையிலும், பிரதேச செயலகங்களிலிருந்து பிரதேச செயலாளர்கள் தலைமையிலும் பிற்பகல் புறப்பட்ட பேரணிகள் அருகிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை சென்றடைந்தன.
மத வழிபாட்டுத் தலங்களில் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பேரணிகளில் கலந்து கொண்ட அரசாங்க அதிகாரிகளும் ஊழியர்களும் ஐ.நா. வின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிரான வாசக அட்டைகளை ஏந்தியவாறு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.