அமைச்சர் மேர்வின் சில்வா குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கட்சி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கை வந்தால் அவர்களின் கை, கால்களை பகிரங்கமாக உடைப்பேன் எனவும் ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவை இலங்கையில் இருந்து தானே விரட்டியதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
அமைச்சரின் இக்கருத்து தொடர்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பதில் ஊடகத்துறை அமைச்சர்,
ஊடகவியலாளர்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் விடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
அமைச்சர் மேர்வின் சில்வா குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அத தெரண பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது,
அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவருடைய கருத்துபடி ஏதாவது குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பதிலளித்தார்.