க.பொ.த சாதாண தரப் பரீட்சைப் பெறுகள் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைப் பெறுபேறுகளை WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்க்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, பெலவத்தையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் காலை 9 மணிமுதல் அதிபர்கள் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை வெளி மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். |
க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன
Labels:
கல்வி
