ஐக்கிய
நாடுகள் மனித உரிமை பேரவையில் எவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்,
வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட மாட்டாது என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். நாட்டுக்கு எதிரான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்நோக்கத் தயார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காரணத்திற்காக வடக்கு கிழக்கு வாழ் மக்களை கைவிடத் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்