இதன் பிரகாரம் காலி மற்றும் கொழும்புக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரோஷான் குணவர்த்தன தெரிவிக்கின்றார்.
போக்குவரத்திற்கு தகுதியற்ற சில பஸ்கள் இந்த சோதனையின் போது இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
இந்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக பஸ்களின் போக்குவரத்து நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
33 பஸ்கள் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
சோதனைக்குட்படுத்தப்படும் பஸ்கள் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டு, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான விதிமுறைகளை ஏற்படுத்துதல் குறித்தும் நடவடிக்கை எடுப்பதற்கு தாம் இணங்கியுள்ளதாக மாகாண பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்த குமார குறிப்பிடுகின்றார்.