இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைந்து போயுள்ளதாகக் காரணம்
காட்டி அந்த நாட்டின் கடன்பெறு தகைமை குறைக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச மட்டத்தில் இலங்கையின் கடன்பெறு தகைமை நேர்க்கணிய நிலையில் இருந்து ஸ்திர நிலைமை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக நிலுவை கணிசமாக அதிகரித்துள்ளமை அதன் கடன்பெறு தகைமை குறைப்புக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டில் இரண்டாம் காலப்பகுதியில் இருந்து இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மிகவும் குறைந்து வந்துள்ளதாகவும், வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் இது சென்மதி நிலுவையின் உறுதிப்பாட்டினை சீர்குலைக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.