கின்னஸ் சாதனை படைத்த நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக்கூறும் உலகின் மிகப்பெரிய புத்தகம்(படங்கள் , வீடியோ)

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப்பற்றிக்கூறும் புத்தகம்,உலகின் மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதiனையை பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பாரமான புத்தகமாக இது காணப்படுவதுடன், இப்புத்தகத்தை உருவாக்குவதற்கு 11மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது.
 Creator Bela Varga of Hungary turns a page of the existing world's largest book
உலகில் அதிகளவு செலவில் உருவாக்கப்பட்ட புத்தமாகவும்,நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப்பற்றிக்கூறும் இப்புத்தகம் விளங்குகின்றது.துபாயின் பிரதி ஆட்சியாளாரும்,ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிதிஅமைச்சருமான செய்க் ஹம்தான் பின் அல்மக்தூமால் இப்புத்தகமானது வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்அதிகாரிகள், ராஜதந்திரிகள்,அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்ற பலர் கலந்துகொண்டனர்.
இஸ்லாத்தின்கடைசி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றிக்கூறும் இப்புத்தகமானது 420பக்கங்ளைக்கொண்டதுடன் ஆயிரம் கிலோகிராம் நிறையுடையது.

இது 5மீற்றர் நீளமும்,4மீற்றர் அகலமும் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் பற்றி சமூகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்புத்தகத்தின் 50,000 சாதாரண பிரதிகளை தனது சொந்தச்செலவில் வெளியிடுவதற்கு செய்க் ஹம்தான் உத்தரவிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now