
நாட்டின் பிரதான வீரர்களில் பெரும்பாலானோர் பங்குபற்றவுள்ள இத்தொடரில் கராச்சி டொல்பின்ஸ் அணியிலிருந்தே ஷகிட் அப்ரிடி விலகியுள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கராச்சி நகர கிரிக்கெட் சபைத் தலைவர் சிராஜ் உல் இஸ்லாம் புகாரி, அப்ரிடி மாத்திரமன்றி சகலதுறை வீரர் ஃபாவத் அலாமும் இத்தொடரிலிருந்து இறுதிநேரத்தில் விலகியுள்ளதாகத் தெரிவித்தார்.
அப்ரிடி இத்தொடரில் பங்குபற்றாமை கராச்சி அணிக்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்த அவர், கராச்சி அணிக்காக அப்ரிடி மிகச்சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வந்தார் எனத் தெரிவித்தார். முதலில் கராச்சி அணியைத் தலைமை தாங்குவதற்கு மறுப்புத் தெரிவித்து சாதாரண வீரராகப் பங்குபற்றுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டிகளில் பங்குபற்றவும் மறுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்ட அவர், தற்போது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நலன்புரித் திட்டமொன்றில் பங்குபற்றுவதற்காகவே அப்ரிடி இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஃபாவாத் அலாம் தனது திருமணம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவித்தார்.