2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பலர் காணாமல் போயுள்ளதுடன் துன்புறுத்தல்களுக்கு இலக்கானதாக ஜெனீவாவில் வெளியிடடுள்ள 63 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சபை குறிப்பிடுகிறது. இலங்கையில் தடுப்பு முகாம்களை மூடுவதுடன் பயங்காரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படுகின்ற எந்தவொரு நபருக்கும் அவருக்கு எதிராக குற்றச்சாடடுக்கள் குறித்து தெளிவுபடுத்துவதற்கும் குடும்பத்தினருடன் தொடர்புக் கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் சட்ட உதவிகளை பெறுவதற்கு இடமளிக்கவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஒருவர் கைது செய்யப்பட்ட உடனேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்து உறவினர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது.
நீதிமன்றத்தில் ஆஜராகின்ற சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த திட்டமொன்று இலங்கைக்கு அவசியமென சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் சுட்டிக்காட்டுகிறது.