சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி

பொறுப்புக் கூறுதல் தொடர்பாக அமெரிக்கா உட்பட உலக சக்திகள் பலவற்றின் அழுத்தங்களுக்கு மத்தியில், சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் விரைவில் சட்டமாக்கப்படும் என சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் ஜெனீவாவிலுள்ள  பல்வேறு தூதரகங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சர்வதேச அமைப்புகள், உலக தமிழர் பேரவை, மனித உரிமைகளுக்கான தமிழர் மத்திய நிலையம் போன்ற எல்.ரி.ரி.ஈ. ஆதரவு அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் கூட்டமொன்றை நடத்தினர்.

அக்கூட்டத்தின்போது சர்வதேச மன்னிப்புச் சபை பல கேள்விகளை எழுப்பியது. அக்கேள்விகளுக்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில், சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படும் என்றார். வீடியோ மூலம் அளிக்கப்படும் சாட்சியங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதை இச்சட்டமூலம் எதிர்பார்க்கிறது.

வீடியோ மாநாட்டு முறை மூலம் சாட்சியமளிக்கப்படும்போது அத்தகைய தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கரிசனைகள் எழ முடியும். வேறொரு இடத்திலிருந்து சாட்சிமளிக்கப்படும்போது பின்னணியிலுள்ள எவராலும் வற்புறுத்தலுக்குள்ளாக்கப்பட சாத்தியமுள்ளது. உத்தேச சட்டமூலத்தில் இவ்விடயங்கள் ஆராயப்பட்டு அத்தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொளள் முடியும்.

இச்சட்டமூலம் 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் பின்னர் விவாதமொன்றின் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது. தற்போது சட்டவரைஞர் திணைக்களம் இச்சட்டமூலத்தை வரைவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now