இலங்கை
அணியின் சகலதுறை வீரர் அன்ஜலோ மத்தியூஸ் - ஆசியக்கிண்ணப் போட்டிகளில்
பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் சிபி கிண்ண
முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிகளின் போது அன்ஜலோ மத்தியூஸ்
பங்குபற்றியிருக்கவில்லை. காலில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அன்ஜலோ மத்தியூஸ்
அப்போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதிச் சோதனைகளின் போது அன்ஜலோ மத்தியூஸ் தனது உடற்தகுதியை முழுமையாக நிரூபிக்கவில்லை எனத் தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன, அதன் காரணமாக அவர் இலங்கைக்குத் திரும்புகிறார் என அறிவித்தார்.
இங்கிலாந்துக்கெதிராக இலங்கையில் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபற்றுவதற்கு அன்ஜலோ மத்தியூஸ் முயற்சிப்பார் எனத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, ஆசியக்கிண்ணத் தொடரில் அன்ஜலோ மத்தியூஸிற்கு மாற்று வீரர் ஒருவர் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இலங்கை அணியின் சகலதுறை வீரரான திஸ்ஸர பெரேரா ஏற்கனவே உபாதை காரணமாக போட்டிகளில் பங்குபற்றாத நிலையில், அன்ஜலோ மத்தியூஸின் இழப்பு இலங்கை அணிக்கு பேரிழப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயமடைந்துள்ள மற்றுமொரு வீரரான லசித் மலிங்க தொடர்பான முடிவு நாளைய தினம் எடுக்கப்படவுள்ளது. அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் லசித் மலிங்க உபாதைகளோடு பங்குபற்றியிருந்ததன் காரணமாக இந்தியாவுக்கெதிராக இடம்பெற்ற முதலாவது ஆசியக்கிண்ணப் போட்டியில் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் லசித் மலிங்க பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இன்றைய தினமும் ஈடுபடுவார் எனவும், அதன் பின்னர் லசித் மலிங்க தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்