அநீதியான முறையில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹாரமக பௌத்த விஹாரை ஒன்றில் ஆற்றிய உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ
விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களான சூசை மற்றும் சு.ப. தமிழ்ச்
செல்வன் ஆகியோரின் குடும்பத்தாரை அரசாங்கமே பராமரித்து வருவதாகத்
தெரிவித்துள்ளார்.
சூசை மற்றும் தமிழ்ச் செல்வனின் பிள்ளைகள் பாடசாலை செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரையும் இலங்கை அரசாங்கம் பராமரித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்க நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.