ஐ.நா.
மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் குறித்து தற்போது கருத்துக்களை
வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இவ்விடயம்
அரசாங்கத்தினால் கையாளப்பட வேண்டியதொன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 1987 ஆம் ஆண்டின்பின் பின்னர் முதல்
தடவையாக இலங்கை விடயம் எவ்வாறு கலந்துரையாடலுக்கு வந்தது என இன்று நடைபெற்ற
கூட்டமொன்றின்போது தனது கட்சி அங்கத்தவர்களுக்கு ரணில் விளக்கினார்.
அப்போதைய அரசாங்கம் அச்சவால்களை புத்திசாதுர்யமான அணுகுமுறை மூலம் எவ்வாறு
வெற்றிகொண்டது என்பதையும் ரணில் விபரித்தார்.
இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் குறித்தும்
இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள 20 ஆவது கூட்டத்தொடரில் அரசாங்கம்
மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் நாடாளுமன்ற விவாதமொன்றை கோரவும் ரணில்
தீர்மானித்துள்ளார்.