டெங்கு
நோயைப் பரப்பும் நுளம்புகளை ஒழிக்கும் பற்றீரியா விரைவில் விற்பனைக்கு
வரவிருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
வாய்மூல பதிலுக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளை ஒழிப்பதற்காக கியூபா பற்றீரியா மற்றும்
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேசிய பற்றீரியாவையும் பயன்படுத்தலாம் என
மருத்துவ நிபுனர்கள் சிபாரிசு செய்துள்ளனர்.
அதன்படி கியூபா பற்றீரியாக்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை
செய்யூம் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதேவேளை இலங்கையில்
தனியார் துறையினர் உற்பத்தி செய்யும் பற்றீரியாவை விற்பனை செய்வதற்கும்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே தனியார் நிறுவனம் விரைவில் தேசிய பற்றீரியாக்களை சந்தைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.