உலகின் மிக வேகமாக ஓடக்கூடிய செயற்கை ரோபோவாக Roboti Cheetah என்னும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
சீட்டா வகை புலியின் உருவம் கொண்ட தலையின்றிய குறித்த ரோபோ, 29km/h (18 Mph)எனும் வேகத்தில் ஓடக்கூடியது.
முன்னதாக 24 km/h (15 Mph) எனும் வேகத்தில் ஓடக்கூடிய ரோபோ உருவாக்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது.
அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் ஆராய்ச்சி திட்ட முகவர் நிலையத்தினால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதனை விட மிக வேகமாக ஓடக்கூடிய தொழில்நுட்பம் இந்த ரோபோவில்
இணைக்கப்பட்டுள்ளதால்,யுத்த களத்தில் மிக வேகமாக எதிரியை துரத்தி
பிடிப்பதற்கும், தாக்குவதற்கும் என களத்தில் விட்டு பரிசோதிக்க போவதாக இதனை
உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.