மேற்குலக நாடு இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ள மனித உரிமை மீறல் பொய்
குற்றச்சாட்டுகளுக்கு எதிராவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதாரவாகவும் பாரிய
ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நேற்று மாலை 5.00 மணியளவில் திருகோணமலையில்
இடம்பெற்றது.
முன்னாள் கூட்டுறவு அமைச்சரும் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட
இணைப்பாளருமான நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில்
நூற்றுக்கணக்கான ஆதாரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ் ஊர்வலம் முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ மஜீத் புஹாரியடி இல்லத்தில்
ஆரம்பித்து குட்டிக்கராச்சி வரை சென்று ஆரம்பமான இடத்திற்கு திரும்பியது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவிற்கும்- அதன் தோழமை மேற்குலக
நாட்டிற்கும்- ஒபாமாவூக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதன் பின்னர் மஜ்துல் கைதர் ஜூம்ஆ பள்ளிவாயலில் அரசாங்கத்திற்கு ஆதரவாக
துஆப் பிராத்தனையிலும் ஈடுப்பட்டனர். இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச
தவிசாளர் எம்.சுபியான்- கிண்ணியா நகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.