கிண்ணத்தை பறிகொடுத்தது இலங்கை, கைபற்றியது ஆஸி, அணி

 
இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய சிபீ கிண்ண முக்கோண ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி செம்பியன் பட்டத்தை வென்று சிபீ கிண்ணத்தை நான்காவது முறையாக தனதாக்கிக் கொண்டது.

232 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 71 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் பெரிதாக துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிக்கே 5 விக்கெட்களையும் பிரட் லீ 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் 48 ஓட்டங்களையும் மெத்திவ் வேட் 49 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் பிரட் லீ 32 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மஹுருப், ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now