போட்டோக்கள், படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கும், உரு வாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையதள ங்கள் உள்ளன.
சிலவற்றின்
பார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சில வற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க
எண்ணு வோம். படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்க ளை
நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலை கீழாகவோ, ஒரு கொ லாஜ் ஆகவோ, சில சிறிய
துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப்
படுவார்கள்.
இவர்களின் அனைத்து எண்ணங்களுக்கும் வழி காட்டும் வகையில் அண்மையில் ஓர் இணைய தளத்தைக் காண நேர்ந்தது. அதன் பெய ர் இமேஜ் ஸ்பிளிட்டர்.
இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி http://imagesplitter.net (click me)
இந்த
தளத்திற்குச் சென்றவுடன், நாம் எந்த படத்தில் மேலே சொன் ன மாற்றங்களை
ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட பைலை அப்லோட் செய்திட வேண்டும்.
பைலின்
அளவு 20 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்னவகையான செ யல்
பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கா ன பட்டனைக் கிளிக் செய்தா ல்,
உடன் அந்த செயல் மேற் கொள்ளப்பட்டு படம் உங்களு க்கு டவுண்லோட் செய்திடக்
கிடைக்கும். இதனை நாம் தேர் ந்தெடுக்கும் டைரக்டரியில் சேவ் செய்து பயன்
படுத்தலாம்.
இதில் என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்? பார்மட் மாற்றலாம். jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய பார்மட்கள் கையாள ப்படுகின்றன.
பார்மட்
மாற்றுவதில் மட்டுமி ன்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்
றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட, உங்களுக்கு எந்த
பார்மட்டில் தேவையோ, அந்த பார்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
படம்
ஒன்றை ரீசைஸ் செய்வ தற்கு, எந்த அளவில் புதிய சை ஸ் இருக்க வேண்டுமோ, அந்த
அளவினை தந்தால் போதும். அள வுகளைத் தந்த பின் “Resize image” என்ற
பட்டனில் கிளிக் செய் தால், அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் என்ன
சிறப்பு எனில், நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல் அளவிற்கு மாற்றி னால்,
அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக் கும்.
இந்த
தளத்தின் பெயர் படங்களை வெட்டுவது (imagesplitter) என உள்ளது. அதற்கேற்ற
வகையில், நாம் தரும் வரையறைகளின் படி, ஒரு படத்தை மிகச் செம்மையாக வெட்டிப்
பல பைல்களாக இந்த தளம் தருகிறது. பட பைல் ஒன்றை அப்லோட் செய்துவிட்டு,
எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை (Rows & Columns) என மட்டும் கொ டுத்தால் போதும்.
உடன்
ஒரு ஸிப் பைலாக இது தரப்படும். அதனை விரித்து, பல துண்டுகளாக அழகாக
இவற்றைப் பெற லாம். எடுத்துக்காட்டாக, நா ன்கு சம துண்டுகளாக ஒரு படம்
வெட்டப்பட வேண்டு ம் என்றால், 2 படுக்கை வரிசை மற்றும் 2 நெட்டு வரிசை எனத்
தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும்.
இதற்குப்
பதிலாக, 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row and 4 columns எனத் தர
வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில், படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி
காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த
பின்னர், நமக் கு ஓகே என்றால், வெட்டுவதற்கு ஓகே சொல்லலாம். இதே போல படங்களின் அளவினைச் சரி செய்திடலாம்.
மேலே
குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த
புரோகி ராமினையும் தரவிறக்கம் செய் து பதிய வேண்டியதில்லை. அக்க வுண்ட்
எதனையும் திறக்க வேண் டியதில்லை. பாஸ்வேர்ட் எதுவு ம் கிடையாது. போகிற
போக்கில் தளம் சென்று, நமக்கு வேண்டிய செயல்பாட்டினை மேற்கொண்டு
சென்றுகொண்டே இருக்கலாம்.