நீதிமன்றுக்கு மதுபோதையில் சென்ற யாழ். நகர வாசியை நீதிமன்ற வளாகத்தில்
மூன்று நாட்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுமாறு தண்டனை விதிக்கப்பட்ட
சம்பவமொன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருக்கிறது.
சைக்கிளொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் மீது ஊர்காவற்றுறைப்
பொலிஸாரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ஒன்று
செய்யப்பட்டிருந்தது.
நீதிவான் ஆர்.எஸ் எம். மகேந்திரராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த வழக்கில் சந்தேகநபர் மதுபோதையில் தள்ளாடிச் சென்றுள்ளார்.
அவரை கைதுசெய்த பொலிஸார் தடுப்பில் வைத்திருந்து மறுநாள் நீதிவான் முன் ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, எச்சரிக்கை விடுத்த
நீதிவான் நீதிமன்ற வளாகத்துக்குள் மூன்று நாள்களுக்கு காலை 9 மணிதொடக்கம்
மாலை 4 மணிவரை துப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார்.