இந்திய
அணியின் முன்னாள் அணித்தலைவரான கபில்தேவ் - இந்திய அணியின் தற்போதைய
தலைவர் மகேந்திரசிங் டோணியை கடுமையாக விமர்சித்துள்ளார். அணியின் தலைவராக
டோணி எடுக்கும் முடிவுகள் தவறாக அமைவதாகத் தெரிவித்த கபில் தேவ், சில
சமயங்களில் டோணி ஒருபக்கச் சார்பாகச் செயற்படுவது போன்று தெரிவதாகவும்
தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களுக்கு மகேந்திரசிங் டோணி கொடுக்கும் ஆதரவை விமர்சித்த கபில் தேவ், "ஒரு அணித்தலைவர் நேர்மையாக நடப்பதோடு, நேர்மையாக இருப்பதை வெளிப்படுத்துதலும் அவசியம்" எனவும், அண்மைக்கால அவரது முடிவுகள் சில அவர் மீது சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
இங்கிலாந்துத் தொடரின் போதும், அவுஸ்திரேலியத் தொடரின் போதும் தொடர்ந்து சறுக்கிய சுரேஷ் ரெய்னாவிற்குத் தொடர்ச்சியாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதும், அவுஸ்திரேலியத் தொடரின் போது அணியுடன் அங்கு சென்றிருந்த மனோஜ் திவாரிக்கு எந்தவித வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை. மனோஜ் திவாரி - இந்தியா சார்பாக இறுதியாகப் பங்குபற்றிய சர்வதேச ஒருநாள் போட்டியில் அழுத்தங்களுக்கு மத்தியிலான சதமொன்றைப் பெற்றிருந்தார். அத்தோடு இங்கிலாந்துச் சுற்றுலாவின் போது ஷகீர் கான் காயமடைய ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுலாவைக் களித்துக் கொண்டிருந்த ஆர்.பி.சிங் மீள அழைக்கப்பட்டு நேரடியாக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அணியோடு இங்கிலாந்துக்குச் சென்றிருந்த முனாப் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.
மேலும் கருத்துத் தெரிவித்த கபில் தேவ், இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளராகும் தகுதிகளைக் கொண்டிருப்பதாகவும், எனினும் இந்திய வீரர்கள் எவரும் அதை விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். இந்திய வீரரொருவர் அணியின் பயிற்றுவிப்பாளராகினால் அணிக்குள் அதிக தலையீடுகள் ஏற்படுத்தப்படும் என இந்திய வீரர்கள் அஞ்சுவார்கள் எனவும் தெரிவித்த அவர், இந்திய பயிற்றுவிப்பாளர்களை எதிர்க்கும் இந்தப் பழக்கம் சௌரவ் கங்குலியினாலேயே ஏற்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டினார்