களுபோவில வைத்தியசாலையின் விசேட சிறுவர் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது

களுபோவில வைத்தியசாலையின் விசேட சிறுவர் கவனிப்பு பிரிவில் தொற்று காணப்பட்டதால் அப்பிரிவு மூடப்பட்டுள்ளதென களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இப்பிரிவில் இலகுவில் நோய்வாய்ப்படக்கூடிய குறைமாதப் பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இங்கு அனுமதிக்கப்பட்ட சில சிசுக்கள் உயிராபத்து ஏற்படக்கூடியளவுக்கு நோய்வாய்ப்பட்டனர். தொற்று காணப்படும்போது சிசுக்களை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிடுவோம். இதைத்தான் நாம் 20 நாட்களுக்கு முன் செய்தோம் என அவர் கூறினார்.

இந்த அலகு மார்ச் 8ஆம் திகதி முற்றுமுழுதாக மூடப்பட்டது. நாம் சகல பரிகார நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த நிலைமை ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றோம். இம்மாதம் 14ஆம் திகதியளவில் இந்த அலகை திறக்க முடியும் என நாம் கருதுகின்றோம் என அவர் கூறினார்.

உலகெங்கும் உள்ள விசேட சிறுவர் கவனிப்பு பிரிவுகளில் இந்த நிலைமை ஏற்படுவது சாதாரணமானதுதான். இது சிறுவர்கள் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் இயல்புள்ளவர்களாக இருப்பதனால் உண்டாவதாகும். இந்த நிலைமை பற்றி நாம் கிராமப்புற வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் நோயாளிகளை அனுமதிப்பதையும் சிகிச்சை அளிப்பதையும் நெறிப்படுத்தி வருகின்றனர் என அவர் கூறினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now