ரஷ்யாவின்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஓரினச் சேர்க்கைக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தில் கவர்னர் ஜியார்ஜி போல்டாவ்சென்கோ
கையெழுத்திட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ரஷ்யாவின் 2வது
பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். இந்நகரில் ஓரினச் சேர்க்கை மற்றும்
அதற்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு
வரப்பட்டது.
இந்த
சட்டத்தில் கடந்த 7ம் தேதி கவர்னர் ஜியார்ஜி கையெழுத்திட்டார். அப்போது
அவர் பேசுகையில், இந்த சட்டம் பிராந்திய அளவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு மட்டும் பொருந்தும். ஓரினச்
சேர்க்கையை ஆதரித்து பிரசாரம் செய்பவர்களுக்கு கணிசமான தொகை அபராதம்
விதிக்கப்படும் என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்காக போராடி வரும் மரியா பிரெமென்கோவா கூறுகையில், இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்வோம். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடுப்போம் என்றார்.