சில
ஆங்கில படங்களில் ஒருவர் ஒரு கணினியை பாவித்த பின் வரும் இன்னொருவர்
முதலாமவர் செய்த வேலைகளை நகல் எடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
வேறு ஒன்றுமில்லை. Key logger மென்பொருள்களை உபயோகித்துத்தான்.
கணினியில் நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள்
என்று சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர்
என்னென்ன செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள்
உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில்
அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள்
பெரிதும் உதவுகின்றன.
இந்த வகை மென்பொருள்களை உங்கள் பிள்ளைகள் பாவிக்கும் கணினியில்
நிறுவிவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளை கவனிக்கலாம். பின்னர் நேரம்
கிடைக்கும்போது பிள்ளைகளின் செயற்பாடுகளை கவனிக்கலாம். key logger
மென்பொருள் குறிப்பிட்ட நேரத்துக்கொரு தடவை கணினியின் செயற்பாடுகளை Screen
Shot எடுத்து வைத்திருக்கும்.
அதோடு Chat History, History Log File
என்பவற்றையும் சேமித்து வைக்கிறது. இந்த முறையில் திருட்டுத்தனமாக
இன்னொருவரின் செயற்பாடுகளை கூட கவனிக்கலாம்
எச்சரிக்கை : பெரும்பாலான இன்ரெர்நெற் கபே களில் திருட்டுத்தனமாக இந்த
Key Logger மென்பொருட்களை நிறுவி வைத்திருப்பார்கள். ஆகவே இன்ரெர்நெற்
கபேயில் இணையத்தை உபயோகிக்கும்போது அவதானமாக இருங்கள்.
Max keylogger எனப்படும் மென்பொருள் key logger மென்பொருட்களுக்குள் சிறந்ததும் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளதுமாகும்.
இதன் சிறப்பம்சங்கள்:
Record Each Keystroke : கீ
போர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.
(கடவுச்சொல், பயனர் பெயர் போன்றவற்றை இப்படித்தான் இன்ரெர்நெற் கபேகளில்
திருடுகிறார்கள்)
Instant Chat Messages Recording : பேஸ்புக், Google Talk, Yahoo
Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு
செய்கிறது.
Track Emails : கணினியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது
Monitor Websites : கணினியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது
Review Every Downloaded File : தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
இதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம், இதை நிறுவி கடவுச்சொல்லையும்
கொடுத்துவிட்டால் உங்களை தவிர வேறு யாராலும் இதை கணினியில் இருந்து அகற்ற
முடியாது.
இந்த மென்பொருளை தீய நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்தவேண்டாம்