
சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று
முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை
125.50 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு இன்று 127 ரூபாவாக
அதிகரித்தது.
டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின்
மதிப்பு 127 ரூபாவாக சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும். போர்
உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் தள்ளாடிய போது
கூட இந்தளவுக்கு ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை.
அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசின்
நம்பகத்தன்மை வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளதைப் போன்று ரூபாவின் மதிப்பும்
மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.