எதிர்கால பண்டிகை காலத்தை முன்னிட்டு செயற்படுத்தப்படவுள்ள விசேட பஸ்
மற்றும் ரயில் சேவைகள் குறித்த தகவல்களை அரசாங்க தகவல் மத்திய நிலையத்தில்
பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை பஸ், தனியார் பஸ் மற்றும் ரயில் சேவைகள் செயற்படுத்தப்படும் நேரம் குறித்த தகவல்கள் இங்கு கிடைக்கப்பெறும்.
மேலும் அதிவேக வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்க தகவல் மத்திய நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன்படி 1919 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைத்தும் www.gic.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்றும் தகவல் அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



