எதிர்வரும் பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதோடு டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலை விடுமுறை வழங்கி மூன்று வாரங்கள் சென்றுள்ள நிலையில் பாடசாலைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும் அங்கு டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் உருவாகியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
விசேடமாக தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கு நோய் பரவுவதற் ஏதுவான காரணியாக அமையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்து வாரம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு 2 மணித்தியாலங்களாவது பாடசாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாணவர்களை ஈடுபடுத்துமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.