2013 ஆம் ஆண்டின் பின்னர் ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடர் நடத்தப்படமாட்டாது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் தொடரே இறுதித் தொடராக அமையவுள்ளது.

மூன்று போட்டி முறைமைகளிலும் ஒரு சம்பியன்ஸ் தொடர் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சர்வதேச ஒரு நாள் போட்டிகள், இருபதக்கு-20 கிரிக்கெட் போட்டிகள், மற்றும் டெஸ்ட் போட்டிகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் ஒரு சம்பியன்ஸ் தொடரே நடத்தப்படவுள்ளது.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட்டுவருவதால் சம்பியன்ஸ் தொடர் இரத்துச் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.அத்துடன் 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் சம்பியன்ஸ் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.