CCTV கமரா பொருத்தப்பட்ட நடமாடும் வான் நேற்றுமுதல் சேவையில்

CCTV பாதுகாப்பு கமரா திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடமாடும் வான் சேவையொன்று நேற்று (17) தொடக்கம் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமைகயம் அறிவித்துள்ளது.

CCTV பாதுகாப்பு கமரா பொருத்தப்பட்ட நடமாடும் வான் நேற்று(17) மாலை 4 மணிக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரை பாதுகாக்கவும் குற்றச் செயல்கள் இடம்பெறாத நகரமாக மாற்றவுமே இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் பிரதான இடங்களில் CCTV பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதும் குறுக்கு வீதிகளில் அவை பொருத்தப்படவில்லை எனவும் அதனால் நடமாடும் வான் சேவை குறுக்கு வீதிகளுக்குச் செல்லும் எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now