அமைச்சர் பந்துல வெளியிட்ட 2500/= ரூபா கருத்திற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பதில்

அமைச்சர் பந்துல வெளியிட்ட கருத்திற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பதில்ரீவி தெரணவில் கடந்த செவ்வாய் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிய வாத பிட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்ட கருத்துக்கு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பதில் அளித்துள்ளனர்.

பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளில் குறைந்த அளவில் உணவுப் பொதிகள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

2500 ரூபாவை கொண்டு தனி மனிதன் மாதமொன்றிற்கு உணவு உண்டு நீர் அருந்தி வாழ முடியும் என தான் தெரிவித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் சில வளங்கள் இலவசமாகக் கிடைப்பதால் உணவுப் பொதியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மின்சாரம், நீர், கேஸ் என்பவை பல்கலைக்கழகத்தில் இருந்து இலவசமாகக் கிடைப்பதால் உணவுப் பொதியை 25-30 ரூபா வரை குறைத்து விற்பனை செய்ய முடிவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் மின்சாரத்திற்கு சிறிய கட்டணம் செலுத்தப்படுவதாகவும் நீர், கேஸிற்கு பல்கலைக்கழகத்தால் கட்டணம் செலுத்தப்படுவதில்லை எனவும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் க்சனிகா கிரும்புரேகம தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் சொல்லும் விலைக்கு ஏற்கத்தக்க தரமான உணவை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் அசேல சம்பம் குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now