இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ள
நிலையில், இலங்கை - இந்திய உறவுகளில் விரிசல் இன்றி சுமூக நிலை
காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது என்பதை அவதானித்து அதற்கு ஏற்றாற்போல் பரிமாணமாக நகர விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான உறவு குறித்து பாராளுமன்றில் இன்று (05) எதிர்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், இந்தியாவுடன் இலங்கைக்கு கோபமோ, பகையோ இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இலங்கை - இந்திய உறவை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இலங்கை வருவதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானித்தமை ´இந்திய கொள்கை கவசம் உள்ள உலோக நாணய சப்தம்´ என பீரிஸ் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முடிவு வேறு சில நாடுகளையும் எதிராக வாக்களிக்க வழி செய்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முடிவை அடுத்து, வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க நினைத்த சிலர் வாக்களித்ததாகவும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நினைத்தவர்கள் வாக்களிப்பை தவிர்த்ததாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் உள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்வுக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.