புனே
வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் மார்லான் சாமுவேல்ஸுன் பந்து வீச்சு
த்ரோவாக(விட்டெறிதல்) உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டார்.
புனேவில்
கடந்த 14ம் திகதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான
ஆட்டத்தின் போது அவர் சில பந்துகளை வீசிய முறை கிரிக்கெட் விதிமுறைகளுக்கு
புறம்பாக இருந்ததாக கள நடுவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டார்.
ஐ.பி.எல். விதிகளின் படி இன்னுமொரு எச்சரிக்கை அவரை தடை செய்து விடும் அபாயம் கொண்டது.
இதுகுறித்து
புனே வாரியர்ஸ் அணியின் அணித்தலைவர் சௌரவ் கங்குலி கூறுகையில், சாமுவேல்ஸை
எச்சரிக்கை செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன், ஐ.பி.எல். முழுவதும் இவரை
விடவும் மோசமான பந்து வீசுபவர்கள் ( விட்டெறிபவர்கள்) உள்ளனர்.
நான்
யாரென்று கூறமுடியாது ஏனெனில் போட்டித் தொடரின் ஒரு அங்கமாக இருந்து
கொண்டு நான் அதனை தெரிவிக்கவியலாது, ஆனால் கவனித்துப் பார்த்தால் தெரியும்.
இவரை விட படு மோசமாக விட்டெறிபவர்கள் எச்சரிக்கை விடுக்கப்படாமல் வீசிக்
கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.
மேலும்
கடந்த 2 ஆண்டுகளாக அவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் பந்து வீசி வருகிறார்
அப்போது அவரை ஒருவரும் விட்டெறிகிறார் என்று கூறவில்லை. ஐ.பி.எல்.
கிரிக்கெட்டிலும் 3 போட்டிகளில் விளையாடினார் அப்போது எச்சரிக்கை
விடுக்கப்படவில்லை.
அவரை தொடர்ந்து அதே போல யார்க்கர்களை வீச வலியுறுத்தியுள்ளேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.