தமிழகம் முழுவதும் வரும் 29-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்க்குகள் மூடல்

சென்னை : தமிழ்நாடு பெட்ரோலியம் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் எம்.கண்ணன், செயலாளர் குமரப்பன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:- அனைத்திந்திய பெட்ரோல் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 22-ந்தேதி நள்ளிரவு முதல் 23-ந்தேதி நள்ளிரவு வரை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் மூடப்படுகிறது.

ஆபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரையினை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். கமிட்டி பரிந்துரைத்துள்ள டீலர்களின் கமிஷனை அதிகரித்து தர வேண்டும். ஆயிரம் லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 393 கமிஷனாக கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எண்ணை நிறுவனங்கள் ரூ.281 மட்டுமே வழங்குகிறது. இதே போல டீசலுக்கு 1000 லிட்டருக்கு ரூ. 170 கமிஷன் வழங்க வேண்டும். மாறாக ரூ. 155 வழங்கி வருகிறது. முழுமையான கமிஷன் தொகையை வழங்க வேண்டும்.

வருடத்துக்கு 2 முறை கமிஷன் தொகையை மாற்றி அமைக்க வேண்டும். பெட்ரோல் நிலையங்களில் கழிப்பிட வசதி, வாகனங்களுக்கு காற்று பிடிக்கும் வசதி ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் 40,500 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் 3,100 பெட்ரோல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 300 பங்க்குகள் உள்ளன. இவை இல்லாமல் புதிதாக 4,500 பெட்ரோல் நிலையங்களை திறக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

புதிதாக பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டால் ஏற்கனவே உள்ள நிலையங்கள் பாதிக்கப்படும். பங்க்குகளை மூடும் சூழ்நிலை உருவாகும். எனவே புதிய பெட்ரோல் பங்க்குகளை திறக்க அனுமதிக்க கூடாது. எந்த இடத்துக்கு அவசியமோ, அந்த இடங்களில் மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும்.

எனவே இதை கண்டித்து 22-ந்தேதி ஒருநாள் மட்டும் அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் மூடுகிறோம். அதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 29-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையின்றி பங்க்குகள் மூடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now