இந்தியாவின் அதிநவீன ஏவுகணை அக்னி-5 இன்று காலை 8.05க்கு வெற்றிகரமாக
விண்ணில் ஏவப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த
ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. மேலும் இது ஒரு டன் எடை கொண்ட ஆயுதங்களையும் தாங்கும் திறன் கொண்டது. ஒலியைவிட 24 மணிநேரத்தில் இலக்கைத் தாக்கும் திறனை உடையது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணையை இந்தியா ஏவியதன் மூலம் அதிநவீன ஏவுகணை வைத்திருக்கும் அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்ஸ் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.
அக்னி ஏவுகணை நேற்று இரவு 7 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை சீரில்லாத சூழலால் இன்று காலை ஏவப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி ஏவுகணை-4 விண்ணில் ஏவப்பட்டிருந்தது.
திபெத் எல்லைப் பகுதியில் சீனா ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் அதிநவீன அக்னி ஏவுகணை சோதனை குறிபிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.