சவூதி
அரேபியாவில் 13 வயதான ஒரு சிறுமியை மாந்திரீகத்தின் மூலம் வசியம் செய்தார்
என்ற சந்தேகத்தில் இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளியாக காணப்பட்டால் இப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
சவூதி அரேபியாவில் குற்றவாளியாக காணப்படும் மாந்திரீகவாதிகள் சிரச்சேதம்
செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பெண் கைது செய்யப்பட்டமை குறித்து உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவல்கள் சரியானவை என அந்நாட்டு பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெத்தா நகரிலுள்ள சுப்பர்மார்கெட் ஒன்றில் இப்பெண்ணின் அருகில் சென்றவுடன் தனது மகள் திடீரென அசாதாரணமான வகையில் நடந்துகொண்டதாக சவூதி அரேபிய பிரஜையொருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்து அப்பெண்ணை கைது செய்யுமாறு கோரினானர். அதையடுத்து, இதுபோன்ற விவகாரங்களை கையாளும் விசேட பிரிவினர் அப்பெண்ணை கைது செய்ததாக ஒகாஸ் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது.