முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி?

இலங்கையில் இறுதிப்போர் நடவடிக்கைகள் மிக உக்கிரமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியினை, தற்போது பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதமளவில், வி.புலிகள் - இலங்கை இராணுவத்தினருக்கு இடையேயான இறுதிப்போர்க் களமாக மாறியிருந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் மாபெரும் இனப்படுகொலை நடைபெற்ற பிரதேசமாகவும் இணங்காணப்பட்டது.

எனினும் யுத்தம் முடிவடைந்ததை அடுத்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீள் அபிவிருத்திக்குட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்து வருவதுடன், போர் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாகவும் கூறிவருகிறது

இந்நிலையில் முள்ளிவாய்க்காலை பகுதியையும் அதனை அண்டிய போர் நடந்த புதுமாத்தளன்ள, வட்டுவாகல், வலைஞர்மடம் போன்ற பகுதிகளையும் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பார்வையிட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அப்பகுதியில் கைவிடப்பட்ட ஏராளமான சொத்துக்களை மீட்கவும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  அத்துடன் அப்பகுதியில் மக்கள் போர் கைவிட்டுச் சென்ற நகை, பணம் உட்பட்ட சொத்துக்கள் பெருமளவில் சூறையாடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  மேலும் அப்பகிதி மக்கள் அங்கு செல்வதற்கு இதுநாள் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அப்பகுதியை பார்வையிடுவதற்கு முல்லைத்தீவு கச்சேரியில் பதிவு செய்து அனுமதி பெற்றுச் செல்லலாம் என்று இலங்கை இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now