கடந்த இரண்டு வருடமாக கிளம்பிய புரளிகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது கூகுள் நிறுவனம். . அதன் படி அதிகாரபூர்வமாக கூகுள் டிரைவ் வசதியை அறிமுக
படுத்தியது கூகுள்.
Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஆடியோ, PDF,
Douments, Photos பைல்களை சேமித்து வைத்து எந்த இடத்தில இருந்தும் எந்த
நேரத்திலும் ஓபன் செய்து பார்க்கும் வசதியை அளிப்பது தான்
Google Drive.
நாம் பார்ப்பது மட்டுமின்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். எதிர்பார்த்த
மாதிரியே 5GB இலவச இட வசதியுடன் வெளிவந்துள்ளது கூகுள் டிரைவ். அதற்க்கு
அதிகமாக இடவசதி வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகை (25GB for $2.49/month,
100GB for $4.99/month or even 1TB for $49.99/month) கட்டி பெற்று
கொள்ளலாம்.
கூகுள் டிரைவ் சிறப்பம்சங்கள்:
- ஒவ்வொருவரும் 5GB இலவச இட வசதியை பெறலாம்.
- தற்பொழுது Windows,Mac, Android இயங்கு தளங்களில் இருந்து உபயோகிக்கலாம். iPad மற்றும் iPhone இயங்கு தளங்களுக்கு விரைவில் வர இருக்கிறது.
- இதற்க்கு முன்னர் இருந்த கூகுள் டாக்ஸ் வசதி இப்பொழுது கூகுள் டிரைவில் இணைந்து விட்டது. ஆகவே ஆன்லைனில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கூகுள்டாக்ஸ் உபயோகிக்க முடியும்.
- கூகுள் டிரைவ் தற்பொழுது போட்டோஷாப்(PSD) பைல்கள் உட்பட 30 க்கும் அதிகமான பைல்வகைகளை சப்போர்ட் செய்கிறது.
- கூகுள் டிரைவில் சேமித்து உள்ள பைல்களை குறிப்பட்ட குறிச்சொல் கொடுத்தோ அல்லது பைல்வகையை கொடுத்தோ தேடும் வசதி உள்ளது.
- கூகுள் டிரைவில் டீபால்டாக OCR தொழில்நுட்பம் இணைந்துள்ளதால் ஏதாவது ஒரு ஸ்கேன் பைலை அப்லோட் செய்தால் அதில் இருந்து எழுத்துக்களை மட்டும் தனியே பிரித்து எடுக்க முடியும்.
- கூகுள் டிரைவில் உள்ள போட்டோக்களை நேரடியாக கூகுள் பிளசில் பகிரும் வசதியும் உள்ளது மற்றும் விரைவில் கூகுள் டிரைவ் பைல்களை நேரடியாக ஜிமெயிலில் அட்டாச் செய்யும் வசதியும் வர இருக்கிறது.
- இது மட்டுமின்றி சில மூன்றாம் தரப்பு மென்பொருள்களின் உதவியுடன் fax அனுப்பும் வசதி, வீடியோக்களை எடிட் செய்யும் வசதிகளை விரைவில் தர இருக்கிறது.
கூகுள் டிரைவ் பற்றி சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
கூகுள் டிரைவ் வசதியை பெற:
எப்பவும் போல இந்த வசதி அனைவருக்கும் இல்லை. நான் முயற்சி செய்தேன் கிடைக்க வில்லை. இந்த லிங்கில் http://drive.google.com/start சென்று
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்த வசதி உங்களுக்கு கிடைக்கவில்லை
என்றாலும் அதில் உள்ள Notify பட்டனை அழுத்தி விட்டால் போதும் உங்களுக்கு
இந்தவசதி தயாரானவுடன் உங்களுடைய மெயிலுக்கு செய்தி அனுப்பி விடுவார்கள்.
பிறகு நீங்கள் கூகுள் டிரைவ் வசதியை உபயோகித்து கொள்ளலாம்.
இவ்வளவு வசதிகளை கொடுத்ததும் கடைசியில் கூலாக இது ஆரம்பம் மட்டும் தான்
என்று கூறுகிறது கூகுள் நிறுவனம். அப்படியென்றால் இன்னும் ஏராளமான வசதிகளை
வாசகர்களுக்கு வழங்க இருக்கிறது கூகுள் டிரைவ்.
இந்த வசதி உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என கீழே கமெண்டில் சொல்லுங்கள்.
இந்த வசதி உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என கீழே கமெண்டில் சொல்லுங்கள்.