இத்தாலியின் கோஸ்தா நிறுவனத்துக்குச் சொந்தமான கோஸ்தா விக்டோரியா என்ற
சொகுசு பயணிகள் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஏழு
அடுக்கு மாடிகளுடன் கப்பலின் மேல் தளத்தில் விளையாட்டரங்கு, நீச்சல்
தடாகங்களையுடைய இக் கப்பலையும், கப்பல் பயணிகளையும் வரவேற்பதற்காக
துறைமுகங்கள் நெடுஞ்சாலை பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தனா நேற்று கொழும்பு
துறைமுகத்துக்கு விஜயம் செய்தார்
.
|
292.5 மீட்டர் நீளமும், 35.5 மீட்டர் அகலமும், 897 மாலுமிகளையும் கொண்ட இக்கப்பலில் 2680 பயணிகள் பயணிக்க முடியும். 2003ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கோஸ்தா விக்டோரியா சொகுசு கப்பல் உலகிலுள்ள பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மிகவும் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய இச்சொகுசு கப்பல் மாலை தீவிலிருந்து தாய்லாந்து நோக்கி பயணமாகும் போதே இலங்கை துறைமுகத்தையடைந்துள்ளது. நாளை காலை மேற்படி கப்பல் தாய்லாந்து நோக்கி பயணமாகிறது என தெரிவிக்கப்படுகிறது. |
ஏழு மாடிகளைக்கொண்ட 'கோஸ்தா விக்டோரியா' உல்லாசக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்(வீடியோ)
Labels:
இலங்கை