வெசாக் தினத்தை முன்னிட்டு மே மாதம் 7ஆம் திகதி அரசினால்
வழங்கப்பட்டிருக்கும் விடுமுறையை ஆசிரியர்களுக்கும் பெற்றுத் தருவதற்கு
நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசினால் அறிவிக்கப்பட்ட விசேட விடுமுறை தினம் ஆசிரியர்களுக்கும் உரியதாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.