Air
France விமான சேவை நிறுவனம், பயணிகளுக்கான தனது விரிவாக்க சேவையில், தமிழ்
மொழிக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air France விமான சேவையில்,
தமிழ்ப்பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள Air France,
இதனைக் கருத்தில் கொண்டே, பயணிகளுக்கான சேவை விரிவாக்கத்தில்
தமிழர்களுக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
2013ம் ஆண்டில் இந்த விரிவாகம்
முழுமையடையவுள்ள நிலையில், தமிழ்ப்பயணிகளுக்கான இலகுபடுத்தப்பட்ட
பயணித்தினை உறுதிசெய்ய, தமிழ் மொழியிலான சேவையினை உள்ளடக்கவுள்ளதாகவும்,
இதற்காக தமிழர்களை வேலையில் அமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை Air France பயணிகளுக்கான சேவையினை விரிவாக்கத்தில் சீன மொழியும் முக்கிய இடத்தினை பிடித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.