
நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல் சம்பவங்களுடன் குறித்த வாகன வாரதிக்கு தொடர்பு இருப்பதாக இணையத்தளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
சமரஜீவ கருணாரட்ன என்ற இராணுவ கோப்ரல் ஒருவரே இவ்வாறு கடத்தல்களில் ஈடுபடும் வெள்ளை வானை செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
W P C C 8649 என்ற இலக்கத்தை உடைய வெள்ளை வானில் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் பொதுமக்கள் என சகல தரப்பினரும் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்காக போராட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொலன்னவ மாநகரசபையின் மேயர் உதயசாந்தவை கடத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட கும்பல் குறித்த சாரதியின் வெள்ளை வானையே பயன்படுத்தியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமைக்கான பிரதான காரணம் என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.