இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ்
தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் முஸ்லிம் உறுப்பினர்
ஒருவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
மாநில தலைவர் கே.எம்.காதர் நபீல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை (16) இலங்கை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள
விழுப்புரம் சென்றிருந்த நபீல், ஊடகங்களிடம் கூறியதாவது, இலங்கை செல்லும்
குழுவில் முஸ்லிம் ஒருவரை இணைத்துக் கொள்வது இலங்கையில் உள்ள தமிழ்
முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் அமையும் என
குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் 45000 பேர் இருப்பதாகவும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அவர்களையும் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அரசியல் தீர்வு விடயம் குறித்த அவர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் நபீல் வலியுறுத்தியுள்ளார்.