ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 4ம் திகதி தொடங்கி மே 27ம் திகதி வரை 12 இடங்களில் நடைபெறவுள்ளன. 76 போட்டிகளில் 9 அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது இந்தியர்கள் கோபம் கொண்டுள்ள நிலையில், சிங்கள கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடக்கூடாது என்றும்,
இலங்கை அணி இந்தியாவில் விளையாடி தோற்கும் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அதை தடுக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடக்கூடாது என்றும்,
மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் செல்வகுமார் தனது வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் மூலம் மதுரை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று (02) நீதிபதிகள் பானுமதி, ராஜேந்திரகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 16 நாட்களூக்குள் பதில் தரச்சொல்லி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.